திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தில் வயலில் உழுதுகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆதித்யன் (21), அவரது தந்தை ராஜா (49) குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்து, தலா ₹3 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.
5.10.2026 அன்று, ராஜா அவர்களின் மகன் ஆதித்யன் (21) விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழுதுகொண்டிருந்தபோது, உயர் அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியதில், மின்கம்பத்தில் இருந்த "வீ கிராசாரம்" மின்கம்பியுடன் டிராக்டர் மீது விழுந்து ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை அருணாச்சலம் அவர்களின் மகன் ராஜா (49) அவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் முதல்வர் நிவாரண நிதி இரங்கல்