தீபாவளிக்கு முன், அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும், அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை. 12 பறக்கும் படைகள்; புகாருக்கு 1800 425 6151.
தீபாவளிக்கு முன், அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும், அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை. 12 பறக்கும் படைகள்; புகாருக்கு 1800 425 6151.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், 29 அக்டோபர் 2026 அன்று மாநிலப் போக்குவரத்து ஆணையரகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதன்மைச் செயலாளர் / போக்குவரத்து ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், போக்குவரத்துத் துறைச் செயலாளர் எல். நிர்மல்ராஜ், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பண்டிகைக் காலங்களில் வழக்கத்துக்கு மாறாக அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு, அனுமதிச் சான்று மீது தற்காலிகத் தடை அல்லது அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதைக் கண்காணிக்கத் தமிழகம் முழுவதுமுள்ள 12 சரகங்களிலும் சிறப்புப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நெரிசலின்றிச் சொந்த ஊர்களுக்குச் செல்ல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவசந்தம் உணவகத்துக்கு முன் ஆம்னி பேருந்துகளை நிறுத்தக் கூடாது; இணையவழித் தளங்களில் உள்ள அந்த இடத்தை நீக்க வேண்டும்; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிறுத்தத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மாவட்ட வருவாய் அலுவலர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர், இணையதள ஆம்னி பேருந்து பதிவு நிறுவனங்கள் (AbhiBus, RedBus, ZingBus, FlixBus, Paytm), தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆம்னி பேருந்து வழக்கத்தைவிட அதிகக் கட்டணம் கேட்டால் போக்குவரத்துத் துறையிடம் புகார் அளியுங்கள்:
ஆம்னி பேருந்து தீபாவளி போக்குவரத்து