நவம்பர் 1 அன்று சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா: 76 அறிஞர்களுக்குத் தமிழ்ச் செம்மல் விருது, திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசு, சென்னைப் பூங்காக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்.
நவம்பர் 1 அன்று சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா: 76 அறிஞர்களுக்குத் தமிழ்ச் செம்மல் விருது, திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசு, சென்னைப் பூங்காக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்.
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1 நவம்பர் 1956-ஐப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 அன்று "தமிழ்நாடு நாள்" தமிழ்நாடு அரசால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு விழா தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாளை, நவம்பர் 1 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அருங்காட்சியக அரங்கில் நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் விழாவில்:
நவம்பர் 1 மாலை, தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படும்.
நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அனைவரும் வருக — அனுமதி இலவசம்.
நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கூத்து, தோல்பாவைக் கூத்து, சிலம்பாட்டம், துடும்பாட்டம், கிராமியப் பாடல் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன.
தமிழ்நாடு நாளையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில, மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும்.
1967-இல் மாநிலத்துக்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேறிய ஜூலை 18-ஐயும் அரசு நினைவு நாளாகக் கடைப்பிடிக்கிறது என்று ஜூலையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு நாள் தமிழ் வளர்ச்சி திருக்குறள்