பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் காட்டிய அசாத்திய வீரத்துக்காகக் கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு ₹48 லட்சம் காசோலையை வழங்கிய முதல்வர் விஜய், அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் கலந்துரையாடினார்.

இந்திய அரசின் கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ₹48 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் சி. ஜோசப் விஜய் 2026 ஜூன் 15, திங்கள்கிழமை வழங்கினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. கீர்த்தி சக்ரா, அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாவது உயரிய வீரதீர விருது.
தலைமைச் செயலகத்தில் மீனாட்சி சுந்தரத்தையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்த முதல்வர், அவர்களுடன் கலந்துரையாடினார்.
சமூக நலன், மகளிர் உரிமைத் துறையை ஆய்வு செய்த முதல்வர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கப்படும் என அறிவித்தார். அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனும் முதல்வரைச் சந்தித்தார்.
ஆயுதப் படைகள் கீர்த்தி சக்ரா வீரம் நாள் 37